பல்லவியும் சரணமும் - V I I
இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே! 'பழைய பாடல் Blogger புலிகள்' தான் பல உலவுகின்றனவே!
போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம் :-))
1. நியாயங்களோ பொதுவானவை, புரியாமல் போனது ...
2. உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும், நிலை உயரும்போதும் பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் ...
3. நம்ம காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்ல, நானொன்று நீயன்று தாம்மா ...
4. உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ?
5. பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே, உறவுக்கு உயிர் தந்தாயே ...
6. வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே, நல்ல குடும்பம் ஒளி மயமாக ...
7. எதனைக் கண்டான், மதங்களை படைத்தான் ....
8. நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே, நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் ....
9. உண்டாவது ரெண்டானதால், ஊர் போவது நாலானதால், தாயாலே வந்தது, தீயாலே வெந்தது ...
10. பூவண்ணக் கூந்தல் என் மஞ்சமாக, நான் கொஞ்சம் பாட நீ கொஞ்சம் பாடு, மன்மதன் சேனைகள் ...
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
6 மறுமொழிகள்:
\\5. பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே, உறவுக்கு உயிர் தந்தாயே ...\
உன்னைத்தானே ஒரு தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே.....
\\7. எதனைக் கண்டான், மதங்களை படைத்தான் ....\அ(வ?)ந்த நாள்முதல் இந்த நாள்வரை
\\9. உண்டாவது ரெண்டானதால், ஊர் போவது நாலானதால், தாயாலே வந்தது, தீயாலே வெந்தது ...\வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்...
1. Panneer pushpangalae raagam pada (Don't know the movie name)
2. Aaru manamae aaru andha aandavan kattalai aaru
3. Namma ooru singari singapooru vandhalaam -- (Ninaiththaalae inikkum)
4. Nilavukku en mael ennadi kopam neruppaai erikirathu -- (Policekaaran magal)
5. Ennaiththaanae thanjam endru nambi vanthaai maanae
6. Anbu malargalae nambi irungalaen naalai namadhae
7. Vandha naal mudhal indha naal varai vaanam maaravillai
8. Paramasivan kazhuththilirantha paampu kaettathu karudaa sowkyamma
9. Vaazhvae maayam indha vaazhvae mayam
10. Not a clue : -)
பன்னீர் புஷ்பங்களே பாடல் " அவள் அப்படித்தான்" படத்தில் வரும்.
அனைத்து கேள்விகளுக்கும் குடிகாரனின் உளறல்கள் ( கலக்குறாருப்பா) பதிலலித்து விடுகிறார்.
அவரை போட்டியில் பங்கேற்பதிலிருந்து தடை செய்தால்தான் மற்றவர்கள் வெற்றி பெற இயலும்.
அன்புடன்
ராஜ்குமார்
Rajkumar,
அவரைத் தடை செய்தால் தான் மற்றவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போலிருக்கு:-) முன்னொரு சமயம் அவரை தடை செய்திருந்தேன். அவரும் என் பேச்சை மதித்து போட்டியில் கலந்து கொள்ளவில்லை!!!! அவரை, 2 பேராவது பின்னூட்டம் இட்டபிறகு தான், போட்டியில் ஆஜராகுமாறு, கேட்டுக் கொள்கிறேன்!
10. வேலாலே விழிகள், இங்கு ஆலோலம் இசைக்கும், சிறு நூலாலே இடையில், மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் ....
என்றென்றும் அன்புடன்
பாலா
நானும் ராஜ்குமாரின் கருத்தை வழிமொழிகிறேன். பதிவுத் தலைப்பைப் பார்த்து ஆசைஆசையாக ஓடி வந்தால் குடிகாரர், அதில் ஒரு ஹாஃப் ஊற்றி எரித்து விட்டார். சரி, மீதி ஹாஃப்ஆவது(படப் பெயர்) நம்ம முயற்சிக்கு விட்டுருக்காரேன்னு சந்தோசப் பட வேண்டியதுதான்.
1. அவள் அப்படித்தான்.
2. ஆண்டவன் கட்டளை.
3. நினைத்தாலே இனிக்கும்.
4. போலீஸ்காரன் மகள்.
5. நல்லவனுக்கு நல்லவன்.
6. நாளை நமதே(இதுதான்னு நினைக்கிறேன்)
7. பாவ மன்னிப்பு.
8. சூரிய காந்தி
9. வாழ்வே மாயம்.
10. பாட்டே எதுன்னு தெரியலை.(நான் கேட்டதே இல்லை)
கண்டு பிடிச்சிட்டிங்களா?
ம்.. நான் லேற்.
Post a Comment